Saturday, November 11, 2017

954. அப்பாடா ........ பூங்கா எங்களுக்கே ........ :)







நிச்சயமான தீர்ப்பு ... நியாயமான தீர்ப்பு ... அதை விடவும் இத்தீர்ப்பு இனி வரும் வழக்குகளுக்கும் ஒரு கலங்கரை விளக்கு போல் இருந்து வழி காட்டும் என்பதில் எங்களுக்குப் பல மடங்கு மகிழ்ச்சி.




ஆனால் ஒரு சின்ன வருத்தம் ...

தீர்ப்பு சொன்ன பின்பும் தீர்ப்பின் நகலுக்காக 98 நாள் காத்திருக்க வேண்டியதாகிப் போய்விட்டது. தேவையில்லாத மன உளைச்சல். வாய்க்கு வந்ததை நிறுத்திய கவலை. இன்னும் ஏதேனும் எதிர்மறையாக நடந்து விடுமோ என்ற அச்சம். There was light in the tunnel ... but it was far off keeping us in limbo. கைக்கெட்டியது வாய்க்குக் கிடைக்கவில்லையே என்ற மருகல்.







இப்போது நான் மொழியாக்கம் செய்து முடித்திருக்கும் நூலின் கடைசிப் பகுதியில் இது போல் பொது நல வழக்குகள் கையாளப்படும் விதம் பற்றி ஆசிரியை அழகாக வருத்தத்துடன் எழுதியுள்ளதை நாங்கள் தீர்ப்பின் நகலுக்குக்காகக் காத்திருக்கும் நேரத்தில் வாசித்து, மொழியாக்கம் செய்து கொண்டிருந்தேன்.  நல்ல ஒற்றுமை. ஆசிரியை பட்ட சோகத்தை என்னால் நன்றாக உணர முடிந்தது. great coincidence .........





நேற்று பூங்கா வேலை மீண்டும் ஆரம்பித்தது.  

1997ம் ஆண்டின் இறுதியில் நானிருக்கும் வீட்டிற்குக் குடி வந்த பிறகு 1998ம் ஆண்டில் ஏறத்தாழ 50 மரங்கள் நட்டோம். வேப்ப மரங்கள் அத்தனையும் தளைத்தன. அடுத்து நன்கு வளர்ந்தவை தூங்கு மூஞ்சி மரங்கள். இப்போதுள்ள பூங்காவின் நடுவில் ஒரு பெரிய மரம் வளர்ந்து பெரும் கிளை பரப்பி நின்றது. அதைப் பார்க்கும் போதெல்லாம் கிருஷ்ணர் கோவர்த்தன கிரியை ஒரு விரலில் தூக்கி நிறுத்தி மாடுகளுக்கு அடைக்கலம் கொடுத்திருப்பாரே ... அந்தப் படம் நினைவுக்கு வரும்.






 சென்ற முறை பூங்கா வேலை ஆரம்பித்த போது இம்மரத்தின் பெரிய கிளைகளை அரக்கி விட்டனர். மழையில் மீண்டும் நன்கு தளைத்து விட்டது.
நேற்று அந்த மரத்தை அறுத்து எடுக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது.  ஒரு பூங்கா வருவதற்காக  ஒரு மரத்தைத் தியாகம் செய்வோம் என்றார்கள். என்னிடமும் அதற்கான அனுமதியைக் கேட்டு அதன் மூலம் என்னைப் பெருமை படுத்திய நண்பர்களுக்கு என் நன்றி.











கடைசியாக அந்த மரம் எங்களுக்கு 
பூசை போட இடமளித்தது.  
நன்றி மரமே!

சென்று வா.


*

இந்த பதிவுக்குத் தலைப்பாக ODE  TO  A  FALLEN  TREE என்று வைத்திருக்கலாமோ?!





*

2 comments:

வேகநரி said...

பூங்கா உங்களுக்கே.. நியாயமான தீர்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.
நியாயமான தீர்ப்பு கிடைத்த பின்பும் காத்திருப்பது என்பது நாட்டின் மிகவும் பெரிய குறைபாடாகும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பூங்கா பொலிவு பெறட்டும். அவ்வாறே மனதும்.

Post a Comment