Sunday, March 18, 2018

975. I.S.L. 2018 - FINAL

* ஏனென்றே தெரியவில்லை .. இந்த சீசனின் I.S.L. விளையாட்டு எதையும் பார்க்கவே இல்லை. சரி .. கடைசி நாள் ஆட்டத்தையாவது பார்த்து விடுவோம் என்று நேற்று – 17.3.18 – உட்கார்ந்தேன். என்னவோ முதல் பத்து நிமிடத்தில் இறுதியாட்டத்தில் இருக்க வேண்டிய ‘fire’ எதுவும் இல்லை. அதிலும் சென்னையின் தற்காப்பு மிக மோசமாக இருந்தது. அதகேற்றது போல் முதல் கோல் ஒன்றும் பெண்களூரு அணி போட்டது. அதன்பின் சென்னையின் அணியின் ஆட்டம் சூடு பிடித்தது. அதோடு, இந்தியாவில் கொல்கத்தா, கோவா கேரளா என்ற மூன்று மாநிலங்கம் மட்டுமே கால்பந்தில் அதிக ஆர்வம் காண்பிக்கின்றன.அந்த மாநிலங்களில் ஏதும் இறுதிக்கு வரவில்லை என்பதே ஏமாற்றமாக இருந்தது. அதோடு பெண்களூரு குழுவில் சேத்திரி விளையாடியதும் பொருந்தாமல் இருந்தது. சென்ற ஆண்டு I.S.L. பற்றி எழுதும் போது நம் நாட்டு வீரர்களும் அயல்நாட்டு வீரர்களும் ஏதோ ஒரு விழுக்காட்டில் இருக்க வேண்டும். நமது நாட்டு ஆட்டக்காரர்களுக்குப் போதுமான விழுக்காடு ஒவ்வொரு அணியிலும் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன். இந்த ஆண்டு இன்னொரு ஐடியாவும் தோன்றுகிறது. ஒவ்வொரு மாநில அணியும் போட்டியில் பங்கேற்க வேண்டும். ஒவ்வொரு அணியிலும் முதலில் 40 விழுக்காடாவது நமது நாட்டு வீரர்கள் விளையாட வேண்டும். அந்தந்த மாநில விளையாட்டு வீரர்கள் அந்தந்த மாநிலத்தில் மட்டும் விளையாட வேண்டும். இப்படி ஓர் ஒழுங்கைக் கொண்டு வந்தால் தான் நம் நாட்டு வீரர்களுக்கு விளையாட இடமும், வசதியும் கிடைக்கும். அதன் மூலமாக மட்டும் தான் கால் பந்து விளையாட்டிற்கு ஊக்கத்தைக் கொடுக்க முடியும். எல்லோரும் வேற்று நாட்டவர்கள் அல்லது வேற்று மாநிலத்தவர்கள் என்றால் அது மாநிலப் போட்டியாக இருக்காது. சென்னையின் அணி வென்றிருக்கலாம், ஆனால் அதில் எத்தனைபேர் நம் மாநிலத்து வீரர்கள் இருந்தனர்? Dhanpal Ganesh மட்டும் நம் ஊர் பெயராகத் தெரிகிறது. என் மாநில முகங்களோ, வீரர்களோ இல்லாவிட்டால் நான் எதற்காக என் மாநிலத்திற்கு ‘விசில்’ அடிக்கப் போகிறேன்? முதல் கோலிற்குப் பிறகு ஆட்டம் சுறுசுறுப்பாக நடந்தது. சென்னை அணி 3:2 என்ற கணக்கில் வென்றது. எப்படியோ .. இந்த ஆண்டு உலகக் கோப்பை ஆட்டம் இருக்கிறது. உட்கார்ந்து பார்க்க வேண்டும். இரண்டரை மணி நேரம் நாம் முன்னால் இருக்கிறோம். அதனால் தூக்கம் கெடாமல் எல்லா ஆட்டங்களையும் காண முடியுமென நினைக்கின்றேன். போன தடவை மாதிரி ப்ரேசில் வரிசையாகக் கோல் வாங்கி கேவலமாக வெளியேறியது போல் இல்லாமல் நன்கு விளையாட வேண்டும். அதிலும், நெய்மர் காலில் அறுவைச் சிகிச்சை முடிந்து நல்ல படியாக விளையாட வரவேண்டும். ப்ரேசில் போன தடவை தோற்றது மிகக் கேவலமாக இருந்தது. பார்க்கலாம் …. , *

No comments:

Post a Comment